ALL NEWS ஆன்மீகம் VIDEO
இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர்- தற்கொலை
June 25, 2020 • Dharmalingam

கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் புகழ் பெற்ற நெல்லை பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து  கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன மற்றும் நெடுஞ்சாலை துறை பணிகள் அதிகளவில் கோவையில் நடக்கின்றன. கோவையில் அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 

காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,403 ஆக அதிகரித்துள்ளது.

நாளை வணிகர்சங்கம் நடத்தும் முழு கட்டையடைப்பிற்கு ஆதரவு அளித்து தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார்