ALL ஆன்மீகம் NEWS VIDEO
இரவு செய்திப்பிரிவு
June 18, 2020 • Dharmalingam

கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

* சித்த மருந்துகளை பயன்படுத்திய கொரோனா நோயாளிகள் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்

*****************************

அரசின் அறிவுரைகளும் முறையாக பின்பற்றினால் கொரோனா வராது - ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

****************************

ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் -  பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை 

* முதலமைச்சரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு

* ஆன்-லைன் வகுப்புக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது

*****************************

கொரோனாவை கண்டுபிடிக்க இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் பரிசோதனை ஆய்வகம் தொடக்கம் 

* டெல்லியில் நடமாடும் பிசிஆர் டெஸ்ட் ஆய்வகத்தை சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்

*********************************

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*******************************

நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

* காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்

* ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்