ALL ஆன்மீகம் NEWS VIDEO
இரவு செய்திப்பிரிவு
June 20, 2020 • Dharmalingam

இரவு செய்திப்பிரிவு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்:

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

*************************

நாளை திட்டமிட்டப்படி ஆன்லைன் நுழைவுத்தேர்வு:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஆனுஇ ஆளுஇ ஆனுளு படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**************************

இணையம் வழியாக பதிவு செய்ய வசதி:

அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி இணையம் வழியாகவே பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,  என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி தொழிலாளர் துறையால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*************************

வெறும் கண்களால் பார்க்க வேண்டாம்:

தமிழகத்தில் நாளை தென்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் காண வேண்டாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் தலைமை ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.

************************

ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்:

பொது முடக்கம் அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

**************************

இரண்டு நாட்களுக்கு காவல் நிலையங்கள் மூடல்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்களுக்கு மூடிவைக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
***************************

வேலைவாய்ப்பு திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:

சொந்த ஊருக்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் நாட்டின் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

****************************

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக நியமனம்:

இந்திய-அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்ற சென்னையை சேர்ந்த தமிழரை அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது.

***************************

புதிய சேவை அறிமுகம்:

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் சார்பில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஎல்ஸ் இண்டர்நேசனல் சென்டர்ஸ்) புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.