ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய (08-06-2020) ராசி பலன்கள்
June 8, 2020 • Dharmalingam

ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்  பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தெய்வ அனுபவம் பெறும் நாள்

ரிஷபம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கடகம்:

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். அமோகமான நாள்.]

சிம்மம்:

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி:

இன்று அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனம் தேவை.காலை, மாலை இரு வேளைகளிலும் கோவிலுக்குச் சென்று வாருங்கள். மனதில் ஏதோ ஒருவகையில் சஞ்சலமும், குழப்பமும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வழியில் தொல்லைகள் வரலாம். செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும்.

துலாம்:

இன்று சிறு விஷயத்திற்கு கூட பெரிதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். தாங்களே எதிர்பாராத வகையில் ஒரிடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்பவர்கள் தக்க லாபத்தை அடையலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். 

விருச்சிகம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும்,இளமையும் கூடும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு:

இன்று சிலர் சாதாரணமாக அறிவுரை வழங்கினாலும் அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண வரவு, இதர சலுகைகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

மகரம்:

இன்று ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். அதனால் மனம் நிம்மதி பெறும். உற்றார் - உறவினர் உங்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் கால் வைக்க திட்டமிருப்பின் அதை நிறைவேற்றலாம். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம்:

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்:

சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த
ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். காரிய சாதனை புரியும் நாள்.

மோகனா செல்வராஜ்