ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய (06-08-2020) ராசி பலன்கள்
August 6, 2020 • Dharmalingam

 

மேஷம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் வேகமும், துரிதமும் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மிதுனம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

கடகம்

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தநிலையும் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும். பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

சாதுர்யமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.

துலாம்

செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் தனித்திறமைகள் வெளிப்படும். இளைய சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். 

விருச்சிகம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

புதிய ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். பணம் நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்

மீனம்

இறைவழிபாட்டில் ஈடுபட்டு வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பயனற்ற சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மோகனா  செல்வராஜ்