ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசி பலன்
June 5, 2020 • Dharmalingam

இன்றைய ராசி பலன் 05/06/2020

மேஷம்:

இன்று சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.

சந்திராஷ்டமம்: 4.6.2020  முதல் 6.6.2020  வரை.

ரிஷபம்

இன்று தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.  தேவையான பண உதவியும் கிடைக்கும்.

மிதுனம்:

உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.  உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். 

கடகம்:

இன்று சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை  சற்று தள்ளி வையுங்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும்.

சிம்மம்:

உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். 

கன்னி:

வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும்.

துலாம்:

ஏற்ற இறக்கம், நிறை குறைகள் உள்ள நேரம். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் மனதில் இனம் புரியாத கலக்கம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் திடீர் பயணமாக சொந்த ஊர் வருவார்கள். புதன் பலமாக இருப்பதால் எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள்.மாமனார் மூலம் மகிழ்ச்சி உதவிகள் கிடைக்கும்

விருச்சிகம்:

ஏழாம் இடத்தில் சுக்கிரன், சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பீர்கள். சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் இருக்கும்.

தனுசு:

சனி, குரு, செவ்வாய் மூவரின் சஞ்சாரம் காரணமாக தடைப்பட்டு வந்த சில விஷயங்கள் தானாக கூடி வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான ஃபிளாட் அமையும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

மகரம்:

சனி, குரு இருவரின் சஞ்சாரம் காரணமாக சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய நகை, பணம் கைக்கு வரும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு அமைப்பு உள்ளது. கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது மிகவும் அவசியமாகும். 

கும்பம்:

செவ்வாய் ராசியில் இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். வரன் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பொருத்தமான சம்பந்தம் கூடி வரும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுவார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். சனி, குரு அமைப்பு காரணமாக அவசிய, அநாவசிய செலவுகள் இருக்கும்.

மீனம்:

கிரக சேர்க்கைகள், சாரபலம் காரணமாக நிறைகுறைகள் இருக்கும். மனைவி வகையில் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோக வகையில் திடீர் வெளியூர் இடமாற்றம் வரும். செவ்வாய் 12ல் இருப்பதால் பணத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்.

மோகனா செல்வராஜ்