ALL NEWS ஆன்மீகம் VIDEO
இன்றைய ராசி பலன் 06/06/2020
June 6, 2020 • Dharmalingam

06/06/2020

மேஷம்:

இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.  பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும்.

சந்திராஷ்டமம்: 4.6.2020 பகல் 12.55. முதல் 6.6.2020 மாலை 4.41 வரை.

ரிஷபம்:

இன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்:

சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.  புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. 

கடகம்:

இன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

சிம்மம்:

தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை,  வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். . பிள்ளைகளின் திருமணத்தை பெரிய மனிதர்களை அழைத்து நடத்த வேண்டுமென வெகுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்

கன்னி:

தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப்பாருங்கள். 

துலாம்:

உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்தொடர்புகிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். சொந்தபந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். ராசிநாதன் சாதகமாக இருக்கும் நேரத்தில் வரவேண்டிய பணம் கைக்கு வரும்

விருச்சிகம்:

செய்யமுடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள்கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். 

தனுசு:

வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

மகரம்:

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் வளைந்துகொடுத்துப் போவார்கள். வேலையாட்கள் இனி புரிந்து கொள்வார்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. 

கும்பம்:

நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும்

மீனம்

தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். மாதவிடாய்கோளாறு, தூக்கமின்மை நீங்கும். சகோதரர்களுடன் பகை வரும். செலவினங்கள் அதிகமாகும்விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதிக அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்

மோகனா செல்வராஜ்