ALL NEWS ஆன்மீகம் VIDEO
இன்றைய ராசி பலன் ஜூலை 30
July 30, 2020 • Dharmalingam

 

மேஷம்: உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சகஊழியர்களை பற்றி குறைகூற வேண்டாம்.

ரிஷபம்: கடினமான காரியத்தையும் எளிதாக பேசி முடிப்பீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர் கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகா ரத்தில் இருப்பவர்களை உதவி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில்  தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கடகம்: இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.

சிம்மம் : வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். மனதில் இருந்த வேதனை அனைத்தும் மறையும். பிள்ளைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக் கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: இதுவரை இருந்த களைப்பு சோர்வு அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மகிழ்ச்சியான நாள் .

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன  கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 

தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள் சகஊழியா்கள் உங்களுக்கு உதவுகரமாக இருப்பர். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

மகரம்: எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்: உங்களின் அறிவாற்றல் அதிகரிப்பதால் கடினமான செயல்களை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
 
மீனம்: இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
 
மோகனா  செல்வராஜ்