ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசி பலன்கள் 17/06/2020
June 17, 2020 • Dharmalingam

 

மேஷம்: விசா தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெண்கள் அக்கம் பக்த்தினரிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டைப் பெறுவர்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம் : கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நின்றுபோயிருந்த பணம் கைக்கு வந்துசேரும். விலகிச் சென்ற உறவினர்களை எண்ணி வருந்த வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது

கடகம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம் : மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க கூடுதலாக உழைக்க வேண்டிவரும். நிலுவைப் பணிகளை சகஊழியர்களின் ஆதரவுடன் எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம் : மன தைரியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகவே கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் தங்களின் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் நிலுவைத் தொகை கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு : குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். நிலுவைப் பணிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். புதியவரின் நட்பை கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பெண்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வேலை முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடிசலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

கும்பம்: பெண்கள் ஆன்மிகப் பெரியோரின் ஆசியை பெறுவர். வியாபாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உள்ள நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

மீனம்: இதுவரை இருந்த கோபம் டென்ஷன்  அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மோகனா செல்வராஜ்