ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசி பலன்  31-5-2020
May 31, 2020 • Dharmalingam

இன்றைய ராசி பலன்  31-5-2020

மேஷம்:

ராசி நாதன் செவ்வாய், பஞ்சமாதிபதி சூரியன் இருவரும் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும். திங்கட்கிழமை பண வரவும், பொருள் சேர்க்கையும் உண்டு. உறவினர் வருகையால் மகிழ்ச்சி வேலைச்சுமை, செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் பல நன்மைகளை பெறலாம். பெண்களுக்கு குடும்பச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் பொறுமையாக இருந்தால் எதிர்பார்த்த வாய்ப்பை பெறலாம்.

ரிஷபம்:

சனி, குரு, கேது மூவரின் அமைப்பு காரணமாக அலைச்சல், அதிருப்திகள் இருக்கும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.அரசாங்க விஷயங்கள் அலைச்சலுக்கு பிறகு கூடி வரும். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் நிலவும். சுபநிகழ்ச்சிக்கான முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் அவை பிற்காலத்தில் நல்ல முறையில் நிகழும் என்பதால் பொறுமையுடன் இருங்கள். அலுவலகத்தில் சகஊழியர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

மிதுனம்:

ராசியில் கூட்டுக் கிரக சேர்க்கை இருப்பதால் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். பிள்ளைகள் செயல்பாடுகள் காரணமாக வருத்தங்கள் வந்து நீங்கும். புதன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். செவ்வாய் அமைப்பு காரணமாக சொத்து விஷயமாக அவசர முடிவுகள் வேண்டாம்.பெண்களுக்கு கணவர் வீட்டு உறவினர்களின் மூலம் பாராட்டும், புகழும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பதற்கு கடுமையான உழைப்பு தேவை என்ற சூழ்நிலை உருவாகும். 

கடகம்:

யோகாதிபதி செவ்வாயின் பார்வை காரணமாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் புதிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் காரணமாக வரவேண்டிய பணம் கைக்கு வரும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்களின் பிரச்னையைத் தீர்த்து மகிழ்ச்சி அடைவர். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்:

செவ்வாய், சூரியன் இருவரும் சாதகமாக இருப்பதால் உங்கள் திட்டங்கள் எல்லாம் முழுமையாக வெற்றியடையும். சகோதரி திருமண விஷயமாக நல்ல இடம் சம்மந்தம் கூடி வரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மிக விரைவான முன்னேற்றத்தை அடைவர்.

கன்னி:

சனி, கேது, குரு மூவரின் அமைப்பு காரணமாக அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். பெண்களுக்கு கருப்பை, தைராய்டு சம்மந்தமான கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் உண்டாகும். தாய் வழி உறவுகளிடையே சில மன வருத்தங்கள் வரலாம்.உங்களது அலுவலக வேலையை மற்றவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களுடன் பழகும்போது ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி உண்டு. பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்பவே கிடைக்கும்.

துலாம்:

ஏற்ற இறக்கம், நிறை குறைகள் உள்ள நேரம். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் மனதில் இனம் புரியாத கலக்கம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் திடீர் பயணமாக சொந்த ஊர் வருவார்கள். புதன் பலமாக இருப்பதால் எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள் வியாபாரத்தில் உள்ள போட்டியை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வ சொத்தின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

விருச்சிகம்:

ஏழாம் இடத்தில் சுக்கிரன், சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பீர்கள். சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் இருக்கும்.  முக்கிய பிரமுகரின் சந்திப்பு கிடைத்து அவர்களின் உதவியை பெறுவீர்கள். அலுவலக உயரதிகாரியின் உதவியால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். மனைவியின் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.

தனுசு:

சனி, குரு, செவ்வாய் மூவரின் சஞ்சாரம் காரணமாக தடைப்பட்டு வந்த சில விஷயங்கள் தானாக கூடி வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான ஃபிளாட் அமையும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். வியாபாரத்தில் நிறை குறைகள் இருந்தாலும் வரவேண்டிய பணத்தைக் கறாராக பேசி வசூல் செய்வீர்கள். பெண்களுக்குப் பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். தாய்மாமன் வகையிலிருந்து உதவிகள் கிடைக்கும். 

மகரம்:

சனி, குரு இருவரின் சஞ்சாரம் காரணமாக சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய நகை, பணம் கைக்கு வரும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு அமைப்பு உள்ளது. கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது மிகவும் அவசியமாகும். மனதில் நினைத்தவை எல்லாம் நிறைவேறுவதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.

கும்பம்:

செவ்வாய் ராசியில் இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். வரன் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பொருத்தமான சம்பந்தம் கூடி வரும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுவார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். சனி, குரு அமைப்பு காரணமாக அவசிய, அநாவசிய செலவுகள் இருக்கும். சந்திராஷ்டமம்: 31.5.2020 காலை 7.53 முதல் 2.6.2020 காலை 10.15 வரை.  மன தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். நீண்ட நாளாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறுகள் தீர்ந்து நிம்மதியடைவீர்கள்.

மீனம்:

கிரக சேர்க்கைகள், சாரபலம் காரணமாக நிறைகுறைகள் இருக்கும். மனைவி வகையில் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோக வகையில் திடீர் வெளியூர் இடமாற்றம் வரும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். குடும்ப பொருளாதாரத்தை பெருக்குவதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார்செவ்வாய் 12ல் இருப்பதால் பணத் தேவைகள் அதிகரிக்கும்.

வடிவமைப்பு  திருமதி S.மோகனா செல்வராஜ்