ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிப்பலன் 08.7.2020
July 8, 2020 • Dharmalingam

மேஷம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 12.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். மற்றவர்களை நம்பி கொடுத்த பொறுப்புகளில் ஏமாற்றங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும்.

துலாம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். நியாயத்தைப் பேச போய் பெயர் கெடும் உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டு கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும் . கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு  அடைவீர்கள். அலைச்சலுடன ஆதாயம் தரும் நாள்.

மீனம்

எதார்த்தமாக பேசிகவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபி வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மோகனா  செல்வராஜ்