ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 31/07/2020
July 31, 2020 • Dharmalingam

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம்   இருப்பதால் பழைய பிரச்சினைகள் மீது கோபப்பட்டு கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில்  சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

மிதுனம்: இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் ரீதியான வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். நினைத்தது நிறைவேறும்.

கடகம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்: தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவால் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.

கன்னி: இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபி.க்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக் குள் அன்பும், ஆதரவும் அதிகரிக் கும். தோற்றப் பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் . உத்தியோகத்தில் புது அதிகாரிகள் உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும்.உறவினர் வழியில் தோன்றிய பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்கும்.

மகரம்: இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கும்பம்: இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

மீனம்: இன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்...

மோகனா  செல்வராஜ்