ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 29/07/2020
July 29, 2020 • Dharmalingam

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரித்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

மிதுனம் : நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. அலுவலக விஷயங்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள் .

சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். 

கன்னி: அடுத்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவீர்கள். உங்கள் உழைப்பால் மேலதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்

விருச்சிகம்:இன்று  காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். 

தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க பாருங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். பணவரவுக்கு குறைவு இருக்காது.வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

மீனம்: மகளின் திருமணம் பற்றி கவலை கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.இன்று மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  

மோகனா  செல்வராஜ்