ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 28/07/2020
July 28, 2020 • Dharmalingam

 

மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் தேவையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.  வாகனப் பழுது நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். வர்த்தகம், வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். 

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. அதை பெரிது படுத்த வேண்டாம். அனாவசியமாக மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சகம்: பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். பணி செய்யும் இடங்களில் மேன்மை உண்டாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

மகரம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்: உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். கெளரவ பதவிகள் வந்தடையும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

 மோகனா  செல்வராஜ்