ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 27/06/2020
June 27, 2020 • Dharmalingam

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம் : இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். 

மிதுனம் : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத வருமானம் உண்டு. பெண்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரிகள் லாபத்திற்காக அதிகம் உழைக்க வேண்டிவரும்.

கடகம்: இன்று தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கன்னி: வியாபாரத்தில் நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். கணவருக்கு நண்பர்கள் மூலம் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். பெண்களின் மனக்குழப்பங்கள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். அலுவலக வேலையில் சிறிய குழப்பம் வந்து விலகும்.

துலாம்: இன்று குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்

விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர் கள். நெருங்கியவர்களுக்காக சிலர் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்து காட்டும் நாள்.

தனுசு: வருமானம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிவரும். அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முக்கியப் புள்ளிகளை நாடுவீர்கள்.

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்: இன்று எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்: நீண்ட நாளாக தடைப்பட்டு வந்த செயல்கள் நடைபெறுவதாற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணலாம். அக்கம் பக்கத்தினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

மோகனா  செல்வராஜ்