ALL ஆன்மீகம் VIDEO NEWS
இன்றைய ராசிபலன் 26-07-2020
July 26, 2020 • Dharmalingam

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

மிதுனம்:இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

கடகம்:கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

துலாம்:இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு:இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

மகரம்:குடும்பத்தில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்:சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்க பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்..

நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

மோகனா  செல்வராஜ்