ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 26/06/2020
June 26, 2020 • Dharmalingam

 

மேஷம்: இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.அலுவலகத்திலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபம் தரும். குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் கொள்வர்.

ரிஷபம்: இன்று உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். 

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்: இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பூர்வ சொத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை எண்ணி பயம் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வரவு, செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

சிம்மம் : இன்று  பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பணமும், வளமும் வந்து சேரும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

கன்னி: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்: தந்தை வழி உறவினர்கள் மூலம் சில உதவிகளை பெறுவீர்கள். குழந்தைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கணவரின் அரவணைப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.
 
விருச்சிகம்: இன்று முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.  உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. 
 
தனுசு: கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம்நிறைந்த நாள்.
 
மகரம்: பணியாளர்கள் சோம்பலுக்கு இடம் தராமல் உழைத்தால் வெற்றி பெறலாம். தந்தையிடம் வீண் வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் நகையை கடனாக கொடுக்கும்போது கவனம் தேவை. வியாபாரிகளுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும்.சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.
 
கும்பம் : இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.
 
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்துஉயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனவசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.
 
மோகனா  செல்வராஜ்