ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 25/06/2020
June 25, 2020 • Dharmalingam

 

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கு வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாள்.

ரிஷபம் : பெண்களுக்கு உடல் அசதி ஏற்படலாம். பணியாளர்களுக்கு மனதில் தேவையற்ற கவலைகள் உருவாகும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்: வியாபாரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு இருப்பது போல் கற்பனை செய்து கொள்வர். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும்.

சிம்மம்: பகல் 12.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சியை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஏற்கனவே பேசி எடுத்த முடிவுகள் இப்போது நன்மை தரும். அலுவலகத்தில் தேவையற்ற சச்சரவுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

துலாம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம் : கலைத்துறையினர் கடினமாக உழைத்து வெற்றி வாகை சூடுவார்கள். அலுவலக பணியாளர்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பர். சிலர் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல புத்தகங்களை படித்து புது விதமான அனுபவத்தை பெறுவர்.

தனுசு:  கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.வியாபாரிகள் எப்போதோ செய்த முயற்சி இப்போது பலன் தரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சியுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம் : ஆன்மிக ஈடுபாட்டால் மனநிம்மதி அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பேசும்போது நிதானம் தேவை. பெண்கள் ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி காண்பர்.

கும்பம்: கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். அறிவுத்திறன் வெளிப்படும் நாள்.

மீனம்: கலைஞர்களின் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் சிலவற்றில் வெற்றி கிடைக்கும். பெண்கள் புதிய நண்பர்களைப் பெறுவர். பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

மோகனா  செல்வராஜ்