ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 22.09.2020
September 22, 2020 • Dharmalingam

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். 

ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்சாரபொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். 

மிதுனம்: சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

கடகம்: வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள்.  கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண்  செலவுகள்  ஏற்படும். புதுவேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.  தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால்  வலிவந்துபோகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 

தனுசு: கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் உண்டாகும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். 

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். பழையகடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்,