ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 22/06/2020
June 22, 2020 • Dharmalingam

மேஷம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பணியாளர்களின் முயற்சி புதிய சிந்தனைகளை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

ரிஷபம் : சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பெட்ரோல், எரிவாயு, கட்டுமானத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பெண்கள் குடும்பத் தேவையை பூர்த்தி செய்வர்

மிதுனம் : ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்

கடகம்: எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். பெண்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கலைத்துறையினர் புகழ் பெறுவர். சிறிய ஆசைகளுக்கு இடம் கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

சிம்மம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்துபூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்பு கூடும் நாள்.

கன்னி:உங்கள் செயலில் வேகம் கூடும்.  உடன் பிறந்தவர்களால்   ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம் : அலுவலக நண்பர்களிடையே ஒற்றுமை கூடும். கணவரின் தாயாருக்கு உடல்நிலை சற்று பாதிப்படையக்கூடும். வீடு, நிலம் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் இணையதளம் மூலமாக பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்

விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

தனுசு:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மகரம்: பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்று தாமதமாகும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கும்பம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அண்டை அயலாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: பண வரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத பரிசுப் பொருட்கள் கிடைக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

மோகனா செல்வராஜ்