ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 21/07/2020
July 21, 2020 • Dharmalingam

மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்: குடும்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூடுதலாக ஒரு புதுத்தொழில் தொடங்குவர். அலுவலக வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம் : மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத் துறையில் உள்ளோரின் கற்பனை விரிவடையும். பொது வாழ்வில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்ப்பை எதிர் கொள்ள தயாராவீர்கள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: சிலரின் சந்திப்பு காரணமாக பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். மனைவி வழி உறவினரால் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடைய பிரச்னை தீரும்.

துலாம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

விருச்சிகம்: பெண்கள் கணவரின் மனம் கவரும் விதத்தில் நடந்து கொள்வர். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் தனவரவுகள் மெல்ல மெல்ல அதிகரிக்கும். கலைஞர்கள் வீண் பயங்களை வெற்றி கொள்வர்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் குறை கொண்டிருக்க வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: அலுவலகத்தில் வீண் கவலைகள் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் யாரையும் புண்படுத்த வேண்டாம். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள். சுபச் செலவுகள் கூடும்.தெய்வ அனுகூலம் பெரும் நாள்.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். உற்சாகம் தொடங்கும் நாள்.

மீனம்: அரசு வகையில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும். திடீர் பணவரவு உண்டு. பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மன அமைதியை பெறலாம்.கனவு நினைவாகும் நாள்.

மோகனா  செல்வராஜ்