ALL VIDEO NEWS ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 19/07/2020
July 19, 2020 • Dharmalingam

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புதுவாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்: உத்தியோகஸ்தர்களுக்கு புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பெண்களின் சாதனைக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்திலிருந்த தேக்க நிலை மாறும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.ஆடை ஆபரணம் சேரும். 

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.சொத்து வாங்கும் போது கவனத்துடன் ஆராய்ந்து வாங்குங்கள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.

சிம்மம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பழைய புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

கன்னி : செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கியமானவர்களைச் சந்திப்பீர்கள்.  உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கலைஞர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம் : சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். எதிர்பார்த்த சில நன்மைகள் தள்ளிப் போவதால் குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் எந்த வம்பிலும் சிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

தனுசு: மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்: உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரபலத் துறைகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கும்பம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: பெண்களின் உடல் நிலை சீராகும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். அலுவலக நண்பரிடம் இருந்து பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்பட்டு பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்வீர்கள்.தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மோகனா  செல்வராஜ்