ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 19/06/2020
June 19, 2020 • Dharmalingam

மேஷம்

இன்று உங்கள் பேச்சில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். பணம் நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். மிக கவனமுடன் இருக்கவும். வருமானம் நல்லபடியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். 

ரிஷபம்

 குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உங்கள் வார்த்தையே உங்களுக்கு எதிரியாக மாறலாம்.  தொழில் தொடங்குவதற்கு இடம் பார்ப்பீர்கள்எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.புது இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்ய சாதாகமான சூழல் உள்ளது. தொழிலில் புது உக்திகளை கையாள்வீர்கள்.

கடகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். எடுக்கும் காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். 

சிம்மம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். மன நிறைவு கிட்டும் நாள்.பிறமொழி பேசும் நபர்களால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும்.

துலாம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்

சமயோசிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன்  புது ஒப்பந்தம் செய்வீர்கள். அமோகமான நாள்.பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிறரிடம் உங்களின் மதிப்பு உயரும். 

தனுசு

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்- பகக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.தாய்மாமன்வழி உறவுகளிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும்

மகரம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவுகள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.திருமணம் சம்பந்தமான சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 

கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர்யோகம் கிட்டும் நாள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.குடும்பத்தில் பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மோகனா செல்வராஜ்