ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 15/09/2020
September 15, 2020 • Dharmalingam

 

மேஷம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.கண் சம்பந்தமாக உபாதைகள் வரலாம்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். .புதன் உச்சமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் அசல், வட்டியுடன் கைக்கு வரும்.சுபநிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: சுக்கிரன் இரண்டில் இருப்பதால் சுப விசேஷத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.உங்களுடைய செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். விலகியிருந்த நண்பர், உறவினர் தேடி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

கடகம்:   ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள்தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நண்பர்களுடன் பகை வரக்கூடும். இளைய சகோதரர் வகையில் இடையூறுகள் இருக்கும். மாலை முதல் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும்அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களிடம் உதவி கேட்டால் அவர்கள் உண்மையாகவே சிரமப்படுகிறார்களா என விசாரித்து உதவுவது நல்லது.குரு ஆட்சி பலத்துடன் இருப்பதால் தொழில் சாதகமாக இருக்கும்.

கன்னி: வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு திருப்தி தரும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணமடைவார்கள். வண்டி வகையில் செலவுகள் இருக்கும். 

துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். உற்சாகமான நாள்.

தனுசு: முன்கோபத்தால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. எந்த வேலையும் பலமுறை அலைந்த பிறகே முடியும். மாலை முதல் சாதகமான நிலை ஏற்படும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்

மகரம்: உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வீட்டை ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். ஆன்மிக பயணம் ஏற்படக் கூடும். சகோதர வகையில் ஒற்றுமை  பிறக்கும். விலை  உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்

கும்பம்: புது தெம்பு பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு. அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். கலைப்பொருட்கள் சேரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் பளிச்சிடும். முக்கிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 

MOHANA SELVARAJ