ALL VIDEO NEWS ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 14-10-2020
October 14, 2020 • Dharmalingam

மேஷம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டுகள் கிடைக்கும் நாள்.கணவன் - மனைவிக்குள் இடையே அன்யோன்யம் உண்டாகும்.

ரிஷபம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.நன்மை கிட்டும் நாள். 

மிதுனம்

பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் சில காரியங்கள் நிறைவேறும்

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களுடன் மற்றவர்களை  ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

கன்னி

குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.  கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

துலாம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கை ஓங்கும். பொருந்தன்மையுடன்  நடந்து கொள்ள வேண்டிய நாள்.புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு

திட்டமிட்ட காரியங்கள் எளிதாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.பழைய இனிய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை  பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்

கணவன் - மனைவிக்கு ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.தடைகள் உடைபடும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய யுக்திகளை கையாளுவீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்.வாகனம் செலவு வைக்கும்..