ALL VIDEO NEWS ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 13/07/2020
July 13, 2020 • Dharmalingam

மேஷம்:  திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பகல் 11.14 மணி முதல் ராசிக்குள் சந்திரன் வருவதால் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை எதிர்ப்போரிடம் கூடக் கனிவாக பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் நண்பரின் சந்திப்பு நிகழும்.

மிதுனம்: சக ஊழியர்களால் சிறு சிரமங்கள் ஏற்படக்கூடும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் தொட்டது துலங்கும். கணவன், மனைவிக்கு இடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

சிம்மம் : வியாபாரிகளுக்கு நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் தீரும். அலுவலகத்தில் சகஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். 
 
கன்னி: இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் நிலவும். உங்கள் ராசிக்கு பகல் 11.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
துலாம்: இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். உத்யோகஸ்தர்கள் நிலுவைப் பணிகளை முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவர். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் லேசாக பாதிக்கப்பட்டாலும் உரிய சிகிச்சையை மேற்கொள்வது.
 
விருச்சிகம்:  இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
 
தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது  வேலை கிடைக்கும். மகளுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.  வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
 
மகரம்: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம்.
 
கும்பம்: இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறி நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
 
மீனம்: வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அலுவலக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தில் புதிய விஷயத்தை கற்றுக் கொள்வீர்கள். பொது விவகாரங்களில் ஈடுபட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
 
 
மோகனா  செல்வராஜ்