ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 12/08/2020
August 12, 2020 • Dharmalingam

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவில் இருந்து இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான நாள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள்

ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள். சில செயல்பாடுகளின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.

மிதுனம் :  இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்

கடகம்: பேச்சுத்திறமையின் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். சபை தொடர்பான பணிகளில் நிலையான எண்ணங்களுடன் செயல்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்: புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்பு கூடும் நாள்.

கன்னி:: இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும். 

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் சங்கீதம் சார்ந்த தொழில் நிபுணர்களுக்கு எதிர்பார்த்திருந்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற தொழில் சார்ந்த விஷயங்கள் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். பிறரை நம்பி எந்தவொரு செயல்களில் ஈடுபடும் பொழுது கவனம் வேண்டும். 

விருச்சிகம்:இன்றைய நாள் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். 

தனுசு: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் சற்று நிதானத்துடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களுக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தியானம் செய்வதன் மூலம் மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

மகரம்:  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் உதவி கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்

கும்பம்: நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும். ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சிறிது ஞாபகமறதியின் மூலம் காலதாமதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

மீனம் : இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.துணிச்சலால் வெற்றி பெறும் நாள்.

ஓம் நமசிவாய 

என்றும் இறைப்பணியில்

மோகனா  செல்வராஜ்