ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 11//07/2020
July 11, 2020 • Dharmalingam

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம் : மறைமுக எதிரிகளால் பிரச்னை வரும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள் உங்களுடன் வந்து இணைவர். வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிறு வருத்தங்கள் மறையும்.
 
மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்கள். ஆவார்கள் உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
 
கடகம்: கலைத் துறையினரின் முயற்சிக்கேற்ற புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்
 
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும் சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றிகொள்ள பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய  நாள்.
 
கன்னி : பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். உறவினர்களால் சிறு சிறு சிக்கல்கள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருக்கும் பிரச்னைகளை நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பீர்கள்.
 
துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.
 
விருச்சிகம்: எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் முக்கிய பணிகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு எதிர்கால வாழ்வை பற்றிய பயம் நீங்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
 
தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகாதியானத்தில் மனம் லயிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உயர்வு பெறும், கனவு நனவாகும் நாள்.
 
மகரம்: தந்தையின் உடல்நல பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உத்யோகத்தில் பொறுப்பு மிகவும் அதிகரிக்கும். குடும்ப நிதிநிலைமையைச் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும்.
 
கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். மனசாட்சிபடி செயல்படும் நாள் .
 
மீனம்: மனைவி வழி உறவினரின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் சில நடைமுறைகளை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையால் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
 
மோகனா  செல்வராஜ்