ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 09/08/2020
August 9, 2020 • Dharmalingam

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

ரிஷபம்: நண்பர்களால் ஆதாயம் பெறும் நாள். வீட்டில் நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். நிம்மதி கூடும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.உத்தியோகத்தில் உங்கள் ஆலோ சனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை  நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர் களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

கன்னி: என்றைக்கோ செய்த தவறுகள் வெளிவரும் நாள். போட்டிகளில் ஈடுபட வேண்டாம். வாக்குக் கொடுத்த விஷயங்களில் சிக்கல் ஏற்படக்கூடும். பொறுப்புகள் ஏற்பதால் வீண் விவாதங்களில் ஈடுபடுவீர்கள். தியானம் பயில்வீர்கள்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்ய தொடங்கு வீர்கள்.நன்மை கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கணவரின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தரும் நாள். தாய்வழி உறவினர்களிடம் பகை வேண்டாம். வழக்குகளில் நிதானப் போக்கு காணப்படும். சுபநிகழ்ச்சிக்கான பணஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.  பெண்களின் தைரியம் கூடும் நாள். பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அக்கம் பக்கத்தினருக்கு உதவி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேற்று மொழியாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .

மகரம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.  புதிய விஷயம் கற்கும் நாள். முயற்சியில் பொறுமை தேவை. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் கிடைப்பர். உறவினருடன் எதிர்பார்த்த அளவு நெருக்கம் இருக்காது. காதல் விவகாரங்களில் மகிழ்ச்சி உண்டு.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செய்வீர்கள். வீண் அலைச்சல் இருக்காது. பெண்களின் மதிப்பு உயரும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும்.அரசால் ஆதாயம் பெறும் நாள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். முக்கிய பிரமுகரின் உதவி கிடைக்கும். பெண்களின் விருப்பத்திற்கேற்ப எதுவும் நடக்கும். சக பணியாளர்கள் மதிப்பார்கள்.

 

மோகனா  செல்வராஜ்