ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 07-08-2020
August 7, 2020 • Dharmalingam

மேஷம்

இன்று பணவரத்து இருக்கும். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.  சகோதர வகையில் பிணக்குகள் வரும்.  உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

மிதுனம்

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். பெண்களுக்கு பணிச்சுமை ஏற்படும். கடன் விஷயங்களில் ஏமாற்றம் உண்டாகக்கூடும். வியாபாரிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.இன்று மனதில் உறுதி பிறக்கும்.. எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். 

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி காணும் நாள்.

கன்னி

எதிர்பார்த்த பணி இடமாற்றம் தாமதமாகும் நாள்இன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

துலாம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

இன்று சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய மனப்புழுக்கம் மறையும். காதலில் ஏற்பட்ட ஊடல்கள் நீடிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும்.

தனுசு

இன்று மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். எதிர்ப்பையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

கும்பம்

இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

 

மோகனா  செல்வராஜ்