ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 05-08-2020
August 5, 2020 • Dharmalingam

 

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணிகளில் கவனம் தேவை.

துலாம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை உருவாகும். உத்தியோகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர் களுடன் விரிசல்கள் ஏற்படும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

மோகனா  செல்வராஜ்