ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 04-08-2020
August 4, 2020 • Dharmalingam

மேஷம்

சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும், உதவியும் கிடைக்கும்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதானமுடன் செயல்படவேண்டிய நாள்

கடகம்: திட்டமிடாத செலவுகள் வரும் நாள். பிறரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலதிகாரி உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு பிரச்னைகள் தீரும்.பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்திற்கு மாற்று கருத்துக்கள் உண்டாகலாம்

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அரசால்அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் உண்டாகும்.  பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நாள். முயற்சியால் சில விஷயங்கள் வெற்றியாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தேவையின்றி கவலைப்படுவீர்கள். பணியில் முன்னேறுவீர்கள்.

துலாம்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை முயற்சி பலிதமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: தம்பதி இடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும் நாள். பழைய கடனை நினைத்து கவலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவு தேவை.குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரம் தொடர்பாக சில செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் சிறு ஏமாற்றத்தை சந்திப்பர். வெளியூரிலிருந்து சுபச்செய்தி செய்தி வரும். கணவரின் ஆதரவு திருப்தி தரும்.நண்பர்களின் உதவியின் மூலம் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் நாடி வருவார்கள்.முன்னேற்றமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மோகனா  செல்வராஜ்