ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் 03-08-2020
August 3, 2020 • Dharmalingam

நமது  உண்மை  செய்திகள்  ஆன்மீக குழுவில் இருந்து இன்றைய ராசிபலன்

மேஷம்:

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.சாதித்துக் காட்டும் நாள்.

ரிஷபம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்:

இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

கடகம்:

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.திடீர் யோகம் கிட்டும்நாள்.

கன்னி:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் உங்கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்:

இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள் அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு:

குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடைப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்:

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

மீனம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள்ஆவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மோகனா  செல்வராஜ்