ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்றைய ராசிபலன் 02/08/2020
August 2, 2020 • Dharmalingam

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: எதிர்பார்த்த தனவரவு தாமதமாகும் நாள். பணியில் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கும். அரசாங்க உதவிகள் கிடைப்பதில் தடை ஏற்படும். பெண்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். கலைஞர்கள் சலிப்படையக்கூடும்

மிதுனம் :இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.  

கடகம்: சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.

சிம்மம் : வீண் அலைச்சல்கள் முடிவுக்கு வரும் நாள். கலைஞர்களின் வெற்றிக்கு முயற்சி தேவை. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணியில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி: இன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.
 
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்
 
விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.
 
தனுசு: கவலைகள் நீங்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை குறையும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விண்ணப்பித்த வேலை வாய்ப்பு கைகூடும். பெண்களுக்கு குதுாகலம் ஏற்படும்.இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
 
மகரம் : சேமிக்கும் எண்ணம் உண்டாகும் நாள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும். தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். எதிர்பாராத பாராட்டை பெறுவீர்கள். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
 
கும்பம்: இன்று பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.
 
மீனம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
 
மோகனா  செல்வராஜ்