ALL ஆன்மீகம் VIDEO NEWS
இன்றைய ராசிபலன் 01/08/2020
August 1, 2020 • Dharmalingam

 

மேஷம்: புதிய வாய்ப்புகளைப் பெறும் நாள். குடும்பத்தில் நெருக்கம் நன்றாக இருக்கும் ஆரோக்கியம் பற்றி கவனம் தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்பு உண்டு. தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோ கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

மிதுனம் : தடைகள் நீங்கும் நாள். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சி கூடும்.சக ஊழியர்களால் ஆதாயமுண்டு

கடகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண் பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம் : திறமைகள் வெளிப்படும் நாள். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சகபணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: இனிமையான நாள். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பார்கள். பெண்கள் திறமை காரணமாக நற்பெயர் பெறுவர். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும்.தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு உயரும் நாள்.

தனுசு : சாதனை நாள். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தடைபட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவைத் தவிர்க்கவும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவு களால் சேமிப்புகள் கரையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம் : பயம் தீர்ந்து நன்மை பெறும் நாள். குடும்பத்துடன் உற்சாகமாக பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப் போகக்கூடும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்து காட்டும் நாள்.

மோகனா  செல்வராஜ்