ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் (17-05-2020)
May 17, 2020 • Dharmalingam • ஆன்மீகம்

  வடிவமைப்பு திருமதிS. மோகனா செல்வராஜ்
மேஷம்  (17-05-2020)
 
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.  வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


அஸ்வினி : ஜெயம் உண்டாகும்.

பரணி : நற்பெயர் கிடைக்கும். 

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
 
                   +++++++++++++++++
 
ரிஷபம்

 தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்
பாட்டிற்குள் வரும்.அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும். 

மிருகசீரிஷம் : முதலீடுகள் உண்டாகும். 


                   ++++++++++++++++++
 
மிதுனம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் வகையில் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
 
                  +++++++++++++++++++
 
கடகம் 
 
மதியத்திற்கு வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சில நேரங்களில் மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.  பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  


புனர்பூசம் : வெற்றி கிடைக்கும். 

பூசம் : மேன்மை உண்டாகும். 

ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும்.


                  +++++++++++++++++++
 
 
சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் அதிகரிக்கும்.  வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மகம் : அமைதி வேண்டும்.

பூரம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும். 
 
               +++++++++++++++++++
 
 
கன்னி

 சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழிலில் செய்த புதுவிதமான முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தாய்மாமன் உறவுகளால் இலாபம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.

                ++++++++++++++++++
 
துலாம்

பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். பணிகளில் பணிச்சுமை அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


சித்திரை : இலாபம் உண்டாகும். 

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : மாற்றம் உண்டாகும்.

                +++++++++++++++++++
 
விருச்சகம்
 
குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகட்டுதல் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 


விசாகம் : வழிகாட்டுதல் கிடைக்கும்.

அனுஷம் : செலவுகள் உண்டாகும்.

கேட்டை : வெற்றி கிடைக்கும்.

                 +++++++++++++++++
 
தனுசு
 
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.  தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மூலம் : தேவைகள் பூர்த்தியாகும்.

பூராடம் : இலாபகரமான நாள்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும். 

                   ++++++++++++++++++
 
மகரம்

 குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.  சிறு தூர பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திராடம் : பிரச்சனைகள் தீரும். 

திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.


                     +++++++++++++++++++
 
கும்பம்

மதியத்திற்கு  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை பற்றிய புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு


அவிட்டம் : சிந்தனைகள் ஏற்படும்.

சதயம் : வாதங்களை தவிர்க்கவும். 

பூரட்டாதி : கனிவு வேண்டும்.

                   +++++++++++++++++
 
மீனம்

மதியத்திற்கு மேல்  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். எதிலும் நிதானம் தேவைப் படும் நாள். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் :இளநீலம் 


பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி :  விழிப்புணர்வு வேண்டும்.
 
                             *சுபம்*
 
                  +++++++++++++++++