ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்றைய ராசிபலன் (07-05-2020)
May 7, 2020 • Dharmalingam • NEWS

 
 (07-05-2020) ராசி பலன்கள்

         வடிவமைப்பு திருமதிS.மோகனாா செல்வராஜ்
மேஷம்
07.05.2020
 ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமைகள் புலப்படும். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8 

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


அஸ்வினி : தனித்திறமை புலப்படும்.

பரணி : இலாபம் உண்டாகும்.

கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.
 
                     ******************
 
ரிஷபம்

 பூர்வீக சொத்துக்களிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். சக ஊழியர்களை நிதானத்துடன் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றி மறையும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். 

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : இன்னல்கள் மறையும்.
 
                      *****************
 
மிதுனம்

 தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். இழந்த பொருட்களை மீட்பதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். அரசாங்க பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

திருவாதிரை : அனுகூலமான நாள். 

புனர்பூசம் : இடர்பாடுகள் நீங்கும். 
 
                      *******************
 
கடகம்

 தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களிள்  மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேன்மையான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூசம் : மேன்மையான நாள். 

ஆயில்யம் : உறவுகள் மேம்படும்.

                  ****************
 
சிம்மம்

 பொதுகூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குருமார்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மகம் : பேச்சில் கவனம் வேண்டும்.

பூரம் : மாற்றம் உண்டாகும்.

உத்திரம் : அமைதி வேண்டும்.
 
                  ****************
 
 
கன்னி

 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். கால்நடைகளின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும். 

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
 
                  *****************
 
துலாம்

 பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். 


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும். 

                  ********************
 
விருச்சகம்

 மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து இலாபம் அதிகரிக்கும். மறைமுக திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


விசாகம் : இலாபம் அதிகரிக்கும். 

அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.

கேட்டை : உயர்வான நாள்.

 
                  ********************
 
 
தனுசு

 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.

பூராடம் : துரிதம் உண்டாகும்.

உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
 
                    ****************
 
மகரம்

 புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளின் மூலம் இலாபம் ஏற்படும். சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். விளையாட்டு துறையில் இவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

திருவோணம் : இலாபம் உண்டாகும்.

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
 
                   *******************
 
கும்பம்

 சபை தலைவராக இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். கெளரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

சதயம் : நம்பிக்கை மேலோங்கும்.

பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும். 

                    ********************
 
மீனம்

 உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : தடை ஏற்படும்.

ரேவதி : காலதாமதம் உண்டாகும். 

                 *********************