ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்று தமிழகத்தில்... : செய்திகள்
May 27, 2020 • Dharmalingam

விடைத்தாள் திருத்தும் பணிகள்

ஒத்திவைக்கப்பட்ட  2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளன. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் 8 இடங்களில்... :

தமிழகத்தில் 8 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, திருத்தணி, திருச்சியில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

 தமிழக அரசுக்கு கோரிக்கை :

சின்னத்திரை படப்பிடிப்புப் பணிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை திட்டம் :

தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

17 புரிந்துணர்வு (Memorundum of Understanding) ஒப்பந்தங்கள் :

ரூ.15,000 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorundum of Understanding) தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.