ALL ஆன்மீகம் NEWS VIDEO
இன்று தமிழகத்தில் 15 குழந்தைகளுக்கு குரானா தொற்று உறுதியானது
May 10, 2020 • Dharmalingam • NEWS

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் அடங்குவர்.

எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 3 வயதில் ஒரு சிறுமி, இரண்டு வயதில் ஒரு சிறுமி என இன்று மட்டும் நான்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பிறந்து ஒருநாளே ஆன குழந்தை, 2 மாதங்கள் மற்றும் 16 மாதங்கள் ஆன குழந்தை என 11 ஆண் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் அனைத்தும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

தமிழகம் முழுவதும் 329 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

நேற்று தமிழக சுகாதாரத் துறை சென்னையில் தற்போது 3,350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 *|  தமிழ்நாட்டில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,204ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

'சென்னையில் மேலும் 509 பேருக்கு கொரோனா'

சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

- சுகாதாரத்துறை

* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,330 லிருந்து 3,839 ஆக அதிகரிப்பு