ALL VIDEO ஆன்மீகம் NEWS
இன்று உலக தாய்ப்பால் தினம் 01/08/2020
August 1, 2020 • Dharmalingam

இன்று உலக தாய்ப்பால் தினம்.

உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது

இனியாவது தாய்மார்கள் உணரட்டும்..குழந்தைகளுக்கு தாய் பால் அவசியம்

உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்டு 1 கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவித்து, இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால்  கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
 
குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில்  ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல்  தடுக்கிறது. 

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.

நன்மைகள்:
 
> தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில்  கிடைக்கிறது.

> தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

>தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
 
> தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது. 
 
> உலகில் எந்த ஒரு கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு தாய்ப்பால் தான்.
தாய்ப்பால் விலைமதிப்பற்றது.

எந்த ஒரு உணவையும் செயற்கையாக உருவாக்கும் இந்த காலத்தில், தாய்ப்பாலை மட்டும் உருவாக்க முடியாது.

ஒவ்வொரு தாய்மார்களும் தனது குழந்தைக்கு, குழந்தை பிறந்து  2 வருடங்களுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குறைந்தது 1 வருடமாவது தாய் பால் கொடுக்க வேண்டும். தாய் பால் கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

தாய்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:

* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

*தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

* வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர், குழந்தைகளுக்கு புட்டியில் பால் கொடுக்கின்றனர். இது தவறு.

இந்த காலத்தில் உள்ள பெண்கள் பல்வேறு காரணத்தால் தாய்ப்பால் கொடுக்க மறுக்கின்றனர். தங்களின் அழகு போய்விடும் என்ற வெற்று காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது.

 

தொகுப்பு மோகனா  செல்வராஜ்