ALL NEWS ஆன்மீகம் VIDEO
இன்று அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு
September 21, 2020 • Dharmalingam

 

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 'விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள்' குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது" என்று கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.