ALL ஆன்மீகம் NEWS VIDEO
இந்திய மருத்துவ சங்க தலைவர் கொரோனாவுக்கு பலி
August 12, 2020 • Dharmalingam

கொரோனா பாதிப்பால், ராஜபாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு டாக்டர் உயிரிழந்துள்ளார். சமூகசேவை, இலக்கியப் பணிகளில் ஆர்வமுள்ள இரு டாக்டர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் ராஜபாளையம் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு கடந்த 20 நாட்களாக இருந்த கோதண்டராமன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் .உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 1.80 லட்சம் பிரசவங்களும் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.