ALL VIDEO ஆன்மீகம் NEWS
இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஐந்து பழங்கள் என்னென்ன
August 8, 2020 • Dharmalingam

பழங்கள், காய்கறிகள் போன்ற சமைக்காத இயற்கையான கிடைக்கும் உணவுப் பொருள்கள் மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவை. அவற்றின் வழியாக நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

இவற்றில் பழங்களின் பங்கு என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழங்கள் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இயற்கையால் நமக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

உடலை உறுதிப்படுத்தவும் உடலில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யவும், ஏன் முழு நேர உணவாகக் கூட மருத்துவர்களால் பழங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, இதய நோய் பிரச்சினை இருக்கிறவர்களுக்கும் இதய நோய் வராமல் தடுக்கவும் சில பழங்கள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அவை என்னென்ன பழங்கள்? எதில் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

1) வாழைப்பழம்:

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம்

பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன

வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பி12 ஆகியவை நிறைந்திருக்கின்றன. 

அதோடு வாழைப்பழத்தில் அமில எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

அளவுக்கு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வேகமாக நிறுத்திவிட முடியும்.

2) கொய்யா:

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன.

இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்க்ககூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யாப்பழம்.

இது எலும்புகளுக்கு உறுதியைக் கொடுக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதாலும் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதாலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழங்களில் ஒன்றாக இருக்கிறது.

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.

சருமப் பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது. இதய வால்வுகளில் கொழுப்புகளைத் தேங்க விடாமல் பாதுகாக்கும்.

நாளை  தொடரும் 

வணக்கம் அன்புடன்

தொகுப்பு மோகனா  செல்வராஜ்