ALL ஆன்மீகம் NEWS VIDEO
இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஐந்து பழங்கள் என்னென்ன -2
August 9, 2020 • Dharmalingam

பழங்கள், காய்கறிகள் போன்ற சமைக்காத இயற்கையான கிடைக்கும் உணவுப் பொருள்கள் மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவை. அவற்றின் வழியாக நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

இவற்றில் பழங்களின் பங்கு என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழங்கள் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இயற்கையால் நமக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

உடலை உறுதிப்படுத்தவும் உடலில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யவும், ஏன் முழு நேர உணவாகக் கூட மருத்துவர்களால் பழங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, இதய நோய் பிரச்சினை இருக்கிறவர்களுக்கும் இதய நோய் வராமல் தடுக்கவும் சில பழங்கள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அவை என்னென்ன பழங்கள்? எதில் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

3) பப்பாளிப்பழம்:

பப்பாளி (Carica papaya) (பறங்கிப்பழம் என்பது மற்றோரு பெயர் ஆகும்) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.

பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை.  மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது

இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்

வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

பப்பாளி என்றாலே அது பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிடும் பழம் என்று ஆகிவிட்டது. 

இந்த பழத்திற்கு குறிப்பிட்ட சீசன் என்று கிடையாது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் பல் முதல் சிறுநீரகப் பிரச்சினை வரையிலும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது. சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழம்.

பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

4) மாதுளை

மனிதர்கள் உண்ணத்தகுந்த பழங்கள் அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததாகும். எவ்வகையான ஒரு பழத்தையும் நமது அன்றாடம் உண்ணும் பழக்கத்தை கடைபிடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த வகையில் பல அற்புத பலன்களை உண்பவர்களுக்கு தரும் மாதுளம் பழத்தின் பயன்களை இங்கு காணலாம்.
 
மாதுளம் பழம் பிராணவாயுவை கிரகிப்பை ரத்தத்தில் அதிகபடுத்துவதால் உடல் பலம் இல்லாதவர்கள், நோயாளிகள் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை இல்லாதவர்கள் இப்பழத்தை அதிகம் உண்டு வருவது சிறந்த பலன் அளிக்கும்.

மாதுளை மற்ற பழங்களை விட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இனிப்பு, கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் துவர்ப்பு சுவையுடன் கூடிய பழம் இது.

மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் அருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.
 
வேறு சில வகையான புற்று நோய்களை தடுக்க கூடிய சக்தியும் மாதுளம் பழத்திற்கு உண்டு.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக மாதுளை இருக்கும். குடலில் உண்டாகும் புண்ணை ஆற்றக் கூடியது. கொழுப்புகளைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளும். கண் முதல் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும். ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது.

இதய அடைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

5) அன்னாசிப்பழம்:

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு. 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது.

'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு. 

அன்னாசிப் பழத்தைத் தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் 'ப்ரோமிலைன்' உள்ளது.

நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் 'ஆன்டிஆக்சிடன்ட்' வைட்டமின் 'சி' சத்தில் உள்ளது.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும்.

வைட்டமின் 'சி' யுடன் 'மாங்கனீஸ்' தாதுப்பொருள், வைட்டமின் 'பி', தையாமின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளது.

அன்னாசிப்பழம் வைட்டமின் பி நிறைந்த அற்புதப் பழங்களில் ஒன்று. இது உடலுக்கு வலிமை தருவதோடு ரத்த விருத்திக்கு உதவக் கூடியது. ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பு மற்றும் கொழுப்புகளை நீக்கக்கூடியது.

இதயப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் அன்னாசிப் பழத்தை ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்

நன்றி. 

வணக்கம் அன்புடன்

தொகுப்பு மோகனா  செல்வராஜ்