ALL ஆன்மீகம் VIDEO NEWS
ஆடிப்பெருக்கு பொதுமக்கள் கூடுவதற்கு தடை
August 1, 2020 • Dharmalingam

ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தடை உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 31.07.2020, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஊரடங்கு காரணமாக, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிவில், ஒருவருக்கு ஒருவர் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்லும் நடைமுறையை கைவிட்டனர்.குழந்தைகள் மட்டும் கட்டிப் பிடித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.