ALL ஆன்மீகம் NEWS VIDEO
ஆகஸ்ட் 6-ல் நடந்த மறக்க முடியாத நிகழ்வு
August 6, 2020 • Dharmalingam

ஆகஸ்ட் 6-ல் நடந்த மறக்க முடியாத  ஓர் நிகழ்வு:

அலெக்சாண்டர் ஃபிளெமிங் 

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். 

💉 பென்சிலின் மருந்தைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். 

💉உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது.

💉பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம்.

💉லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.

💉பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

💉தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார்.

💉 எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது

💉 படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்

💉மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்

💉1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார்.

💉கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது.

💉அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங்

💉 நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அவற்றில் திடீரென்று தோன்றிய நீலநிற பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தார்.

பாராட்டுக்களும் விருதுகளும்:

💉1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

💉ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

💉1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

💉2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.

💉2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.

💉அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது

மனித குலத்திற்கு நன்மை சேர்த்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய இவர் மார்ச் 11, 1955ஆம் ஆண்டு மறைந்தார்.

 

தொகுப்பு  மோகனா  செல்வராஜ்