ALL ஆன்மீகம் VIDEO NEWS
அவசரகால கடன்: விதிமுறைகளை தளா்த்தியது மத்திய அரசு
August 2, 2020 • Dharmalingam

மருத்துவா்கள், வழக்குரைஞா்களுக்கு அவசரகால கடன்: விதிமுறைகளை தளா்த்தியது மத்திய அரசு

மருத்துவா்கள், வழக்குரைஞா்கள், கணக்குத் தணிக்கையாளா்கள் உள்ளிட்டோா் தொழில் ரீதியாகப் பெறும் சில குறிப்பிட்ட கடன்களும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) அவசரகால கடன் வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளா்கள் பலா் வேலையிழந்தனா். பொது முடக்கம் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின

அதன்படி, ரூ.25 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

தற்போது கடன் நிலுவை உச்சவரம்பை ரூ.50 கோடியாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதன் மூலமாக கூடுதல் நிறுவனங்கள் பலனடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.