ALL ஆன்மீகம் NEWS VIDEO
அயோத்தி ராமர் கோவில்
August 5, 2020 • Dharmalingam

 

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆக.05) அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) வெளியிட்ட பயண அறிக்கையின் படி, பிரதமர் மோடி நகரில் மூன்று மணி நேரம் செலவிடுவார், அந்த நேரத்தில் அவர் அனுமன் காரி கோயிலையும் பார்வையிடுவார்.

பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் கோயில் நகரத்திற்கு வந்து நிகழ்வு முடிந்தவுடன் மதியம் 2 மணியளவில் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலக பொறுப்பாளர்கள் தவிர, அழைக்கப்பட்டவர்களில் நாடு முழுவதும் 36 ஆன்மீக மரபுகளைச் சேர்ந்த 135 மதத் தலைவர்கள் உள்ளனர்.

ராமர் கோவில் கட்ட வேண்டும் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க, நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன் எனவும் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.