ALL ஆன்மீகம் NEWS VIDEO
அயோத்தி ராமர் கோவில் செய்திகள்
August 6, 2020 • Dharmalingam

இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் என அயோத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பகவான் ஸ்ரீ ராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். இந்தியா முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அளவிடட்டும்.

ஒவ்வொரு இந்தியரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்ததை அடுத்து, 81 வயதான ஊர்மிளா சதுர்வேதி என்ற மூதாட்டி, தனது 28 ஆண்டு கால விரதத்தை முடித்தார். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச   மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஊர்மிளா சதுர்வேதி , அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கினால் மட்டுமே இனி உணவு சாப்பிடுவது என உறுதிமொழி எடுத்தார்.

அதன்படி கடந்த 28 ஆண்டுகளாக தயிர், பால் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு தனது நீண்ட கால  உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.