ALL NEWS ஆன்மீகம் VIDEO
அம்மா உணவகங்களில் இலவச உணவு
June 18, 2020 • Dharmalingam

 

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த உணவை, தேவைப்படும் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று இலவசமாக வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடைமுறை நாளை முதல் இம்மாத இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.